செம வசூல் வேட்டை..! லக்கி பாஸ்கர் மூன்றாவது நாள் வசூல் இவ்வளவா ?
Nov 4, 2024, 07:35 IST
பிரபல நடிகர் மம்முட்டி அவர்களின் மகன் துல்கர் சல்மான் அவர்களின் லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகியிருந்தது வெளியாகி மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிய இத்திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து மீனாட்சி சவுத்ரி மற்றும் ராம்கி போன்ற பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல் வரவேற்பை பெற்று மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் 40 கோடி வசூல் செய்துள்ளதுடன் அமரன் திரைப்படத்திற்கு அடுத்ததாக வசூலில் முன்னிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.