தலைவரின் வெறியன் நான் : சரவணன்..!

ரஜினியின் அதி தீவிர ரசிகராக இருந்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகர் சரவணன் . இவர் ரஜினிக்காக அடிதடியெல்லாம் செய்திருக்கின்றேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக பிரபலமானார் சரவணன்.

அதன் பிறகு அபிராமி, மாமியார் வீடு போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார் சரவணன். பிறகு ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படம்அவருக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பு என்ற ரோலில் மிக சிறப்பாக நடித்திருப்பார் சரவணன்.

இன்றுவரை அவரை பெரும்பாலானோர் சித்தப்பு என்று தான் அழைத்து வருகின்றனர். அந்தளவிற்கு அவருக்கு பருத்திவீரன் திரைப்படம் பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றார் சரவணன். இந்நிலையில் ரஜினியின் தீவிரமான ரசிகரான சரவணன் ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். என்னதான் ரஜினியின் ரசிகராக சரவணன் இருந்தாலும் ஜெயிலர் படத்தில் அவருக்கு எதிரான வில்லன்களில் ஒருவராக தான் நடித்தார்.

இதையடுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினிக்காக சண்டை செய்ததை பற்றியெல்லாம் சரவணன் பேசியிருந்தார். ரஜினி மற்றும் ஜெய் ஷங்கர் நடித்த துடிக்கும் கரங்கள் படத்தை திரையில் பார்த்துக்கொண்டு இருந்தாராம் சரவணன். அப்போது ரஜினி ரசிகர்கள் எல்லாம் ஒருபக்கம் ஆரவாரம் செய்துகொண்டு இருந்தார்களாம். அதே வேளையில் ஜெய் ஷங்கர் ரசிகர்களும் ஆரவாரம் செய்துள்ளார்கள். இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கின்றது.

இவரின் இந்த பேட்டியை ரஜினி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். ரஜினியின் தீவிரமான ரசிகரான சரவணன் அவருடனே ஜெயிலர்படத்தில் நடித்ததை அவர் சிறப்பாக பார்க்கின்றாராம். அதற்கு இயக்குனர் நெல்சனுக்கு தான் நன்றியினை கூற வேண்டும் என சரவணன் தெரிவித்திருக்கின்றார். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த சரவணன் அதன் பிறகு நந்தா, பருத்திவீரன் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.

தற்போது குணச்சித்திர ரோல்கள், வில்லன் கதாபாத்திரங்கள் மற்றும் காமெடி ரோல்களிலும் நடித்து அசத்தி வருகின்றார் சரவணன். மேலும் ஜெயிலர் படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இப்படிப்பட்ட ரஜினியின் ரசிகராக இருக்கும் சரவணன் அவருடன் இணைந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.