'நான் தமிழ் பொண்ணு’- நடிகை ஆண்ட்ரியா பெருமிதம்..!

 

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்ட ஆண்ட்ரியா தன்னை தமிழ் பெண் என்று கூறி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரக்கோணத்தில் வாழ்ந்து வந்த ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா. ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டிருந்தாலும், தமிழை சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர். சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தொடர்ந்து பள்ளியில் தமிழ் மொழியை படித்தவர்.

ஆனால் ஆங்கில பின்புலம் இருந்ததால், அந்த மொழியில் தான் அவருக்கு ஆளுமை வளர்ந்தது. இதனால் கல்லூரி முடித்து மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய போது, ஆங்கில மொழி நாடகங்ளில் தான் பெருமளவில் நடித்தார். சினிமாவில் கவுதம் மேனனால் அறிமுகம் செய்யப்பட்டதால் ஆங்கிலத்தை முன்னிறுத்தியே அவர் இயங்க வேண்டியதாக இருந்தது.

இந்நிலையில் ராம், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றியதை தொடர்ந்து சினிமாவில் ஆண்ட்ரியாவுக்கான  அடையாளம் மாறியது. இது அவரை மக்களுடன் நெருக்கமாக இருக்கும் சூழலை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியான விளைவாக சமூகவலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா. மேலும் அந்த புகைப்படம் வடசென்னை ’சந்திரா’ கதாபாத்திரத்தை நினைவூட்டுவதால், வடசென்னை இரண்டாம் பாகம் துவங்கப்பட்டுவிட்டதா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.