என் கனவுகளை நோக்கி ஒளியை நோக்கி செல்கிறேன் - பிரியங்கா..!

 

விஜே. பிரியங்கா கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் என இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை அந்த அளவிற்கு நகைச்சுவைத்தனமான பேச்சால் நிகழ்ச்சியை போர் அடிக்க வைக்காமல் நகர்த்தி கொண்டு செல்வார்.

இவருக்கும் விஜய் டிவியின் மற்றொரு பிரபல தொகுப்பாளராக இருந்த மணிமேகலை என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்றே. இதனால் பல பிரபலங்கள் உட்பட பலரும் பலவாறு தொடர்ந்து பேசிவந்தார். 

இந்நிலையில், பிரியங்கா அவரது இன்ஸ்டா பக்கத்தில் கழுகு இறக்கைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கீழ், "நான் என் வாழ்வில் கண்ட காயங்கள் எல்லாம் தற்போது மறைந்து விட்டது, என் வளர்ச்சிக்கு ஒவ்வொரு கண்ணீர் துளியும் உதவியது. நான் எழுவது எனக்காக மட்டுமில்லை. என் கனவுகளை நோக்கி, ஒளியை நோக்கி செல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு...