தினமும் என் மகளுக்கு அடி, உதை..பிரபல நடிகர் வேதனை!

 

 'நாதஸ்வரம்' சீரியலில் சம்பந்தம் என்கிற கேரக்டரில் அறிமுகமானவர் முனீஸ்ராஜா. இவர் நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பி ஆவார். திருமுருகன் இயக்கிய 'நாதஸ்வரம்' சீரியலில் இவரின் பேச்சு, நடைக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதன் பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் முனீஸ்ராஜாவும் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் மூலம் இவர்களின் சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.

காதலுக்கு வீட்டில் ஒப்புதல் இல்லை என்பதால் அவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில்  நடிகர் ராஜ்கிரண் ‘பிரியா என் மகளே இல்லை’ என அறிவித்திருந்தார். பிரியா அவரது வளர்ப்பு மகள் என்பது அப்போதுதான் வெளியுலகத்துக்கே தெரிய வந்தது. திருமணம் முடிந்தப் பிறகு  இரு தரப்பும் காவல்துறையில் மாறி மாறிப் புகார் அளித்து பெரும் சர்ச்சைகளும் எழுந்தன.

ராஜ்கிரணும், அவரின் மனைவியும் விருப்பம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் பிரியா முனீஸ்ராஜாவுடன் சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ‘எங்கள்  திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள்  பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது’ என்று தெரிவித்து பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பிரியாவின் இந்த வீடியோவிற்கு பதிலளித்துள்ள முனீஸ்ராஜா, இதன் பின்னணியில் யார் இருப்பார் என உங்களுக்கே தெரியும் என ராஜ்கிரண் பெயரை சொல்லாமல் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறியதாவது, “பணக்கார குடும்பங்களை குறிவைத்து பணம் பறிப்பது தான் முனீஸ்ராஜா மற்றும் அவனது குடும்பத்தாரின் வேலை. இதற்காக கொல்லிமலை பக்கம் போய் வசியம் செய்யப்பட்ட மருந்து வாங்கி அதை சம்பந்தப்பட்ட பெண்களை சாப்பிட வைத்துவிடுகிறார்கள். அதன்பின் அவர்கள் சொல்வதையே அந்த பெண்களையும் கேட்க வைத்து விடுவார்கள். இப்படி ஏழெட்டு பெண்களிடம் அந்த குடும்பமே பணம் பறித்துள்ளது. இது தான் அவர்களின் வேலை.

இதையெல்லாம் தெரியாமல் என் பொண்ணு போய் மாட்டிக் கொண்டது. அந்த பையனை பிரிந்து 5 மாதம் ஆகிவிட்டது. இப்போ என் பெண்ணை நான் தான் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து பார்த்து கொள்கிறேன். என் பெண்ணுடன் வாழணும் நினைப்பவன் பெண்ணை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். அதை விட்டு பணம் வாங்கிட்டு வா என டார்ச்சர் செய்வது, அடிப்பது என்று இருந்துள்ளான்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என் எதிர்ப்பை மீறி திருமணம் செய்றீங்க. ஒரு வருடம் நல்லபடியா உன்ன வச்சு அவன் வாழ்ந்தான் என்றால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் இல்லையென்றால் என் முகத்தில் முழிக்காதே என்றேன். அவன் நல்லபடியாக வாழ வைக்கவில்லை. ஆறேழு மாதத்தில் என் மகள் பிரிந்து வந்துவிட்டார்.

முனீஸ்ராஜாதினமும் குடித்துவிட்டு அடிப்பது, கொடுமைப்படுத்துவது என எல்லா டார்ச்சரும் செய்துள்ளான். அவன் மட்டுமல்ல அவன் குடும்பமே இதற்கு உடந்தை. தினமும் குடித்துவிட்டு வந்து அடித்ததால் உடல்ரீதியாக என் மகள் பாதிக்கப்பட்டார். இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு சித்ரவதை அனுபவித்துள்ளார். இந்த விஷயம் எனக்கு முதலில் தெரியாது. பின்னர் வேறு ஒருவர் மூலம் தெரியவர ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தேன்.

பிரிந்து வந்த பின்னர் முனீஸ்ராஜா மீண்டும் என் மகளுடன் வாழ பேசி உள்ளார். ஏற்கனவே முனீஸ்ராஜா நிறைய திருமணம் செய்துள்ளான். அந்த விஷயம் எல்லாம் என் மகளுக்கு தெரியவர அவர் தெளிவாக பதில் அளித்துவிட்டார். தற்போது என் மகள் மன ரீதியாகவும் பாதிப்பில் உள்ளார். சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறியுள்ளார்.