உன் குடும்பத்தை அசிங்கப்படுத்த தான் இத செஞ்சேன்..! குமாரின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ளும் அரிசி..!
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் சக்திவேலை பார்த்து குமார் பற்றி கேட்கிறாள் சுகன்யா. நேத்து நைட் போன் பண்ணி அரசியை பாக்கனும் சொன்னாள். நானும் அவன் ஏதாவது பண்ணிருவான்னு பயத்துல அவளை குமாரை பார்க்க அனுப்பி வைச்சேன். அதுக்கப்புறம் போன் பண்ணா எடுக்க மாட்றான். இப்போ மொத்த குடும்பமும் அரசியை தேடி இல்லைன்னு கோவத்துல இருக்காங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.
எல்லாருக்கு குமார் ஏதாவது பண்ணி இருப்பான்னு சந்தேகம். உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என கேட்கிறாள். அவன் என்கிட்ட எதுவும் சொல்லலையே என கூறிவிட்டு போன் பண்ணி பார்க்கிறான். குமார் அவனுடைய போனையும் எடுக்கவில்லை. அதன்பின்னர் சுகன்யாவிடம், குமாரோட அரசி போயிருக்கான்னு யாருக்கும் தெரியாதுல என கேட்கிறான் சக்திவேல். அவளும் இல்லை யாருக்கும் தெரியாது என சொல்கிறாள். இதனையடுத்து குமாரை ஒரு வேலையா திருச்சிக்கு அனுப்பி இருக்கோம்ன்னு சொல்லு.
வேற தெரிஞ்சுக்கிட்ட மாதிரி நீ காட்டிக்காத என சொல்லி அனுப்பி வைக்கிறான். இதனையடுத்து அவள் நேராக வீட்டுக்கு வந்து சக்திவேல் சொன்ன மாதிரியே சொல்கிறாள். இதனால் அரசிக்கு என்ன ஆனது என தெரியாமல் அனைவரும் குழம்புகின்றனர். அப்போது அவளுடைய போனை எடுத்து கொண்டு வருகிறாள் ராஜி. அரசியோட போன் இங்கதான் இருக்கு. சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிருக்கு என சொல்கிறாள்.
இதனிடையில் அரசியை ஊருக்கு வெளியே கடத்தி வந்து கட்டிப்போட்டு வைத்திருக்கிறான். அவள் மயக்கத்தில் இருக்க எழுப்பி, என்னடி நைட் முழுக்க கத்திட்டே இருந்த. இப்போ வாய்ல இருக்க துணியை கழட்டுறேன். கத்து கொடுக்காத என சொல்லி கழட்டி விடுகிறான். அரசி அவனிடம் தயவுசெஞ்சு என்னை விட்டுடு. உன்னை எவ்வளவு நம்பி பழகுனேன் என்கிறாள். அதற்கு அவன் நீ என்னை நம்புனியா? நான் உன்னை நம்ப வைச்சேன்.
எத்தனை நாள் திட்டம் இது தெரியுமா? உன் குடும்பத்தை அசிங்கப்படுத்த தான் இது எல்லாத்தையும் செஞ்சேன் என்கிறான். இதனால் அதிர்ச்சி அடையும் அரசி, என்னை விட்டுடு. என் வீட்ல இந்நேரம் எல்லாரும் என்னை தேட ஆரம்பிச்சு இருப்பாங்க. என் அப்பா உயிரையே விட்டுடுவாரு என்கிறாள். அதற்கு அவன் அப்படி மட்டும் நடந்தால் இந்த உலகத்துலயே என்னைய விட அதிகமா சந்தோஷப்படுற ஆள் யாரும் இருக்க முடியாது.
உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கி வைச்சு இருக்கேன் என சொல்லி தாலியை எடுத்து காட்டுகிறான். உன்னை கல்யாணம் பண்ணலாம் தான் நினைச்சேன். ஆனால் உங்க பிச்சைகார குடும்பத்தை அசிங்கப்படுத்த என் வாழ்க்கையை நான் ஏன் கெடுத்துகனும். எனக்கு பணக்கார பொண்ணை பார்த்து இருக்காங்க. அவளை தான் கல்யாணம் பண்ண போறேன். பின்ன ஏன் உன்னை கடத்திட்டு வந்தேன் யோசிக்கிறியா? உன் கொஞ்ச நேரம் கழிச்சு உன் வீட்ல கொண்டு போய் விடுவேன்.
நைட்டு முழுக்க நீ என் கூடத்தான் இருந்தேன்னு சொல்லுவேன். அவுங்க எப்படி வேணாலும் புரிஞ்சுக்கட்டும் என சொல்லி ஷாக் கொடுக்கிறான். இதனையடுத்து அரசி கதறி அழுது என்னை விட்டு விடுமாறு கெஞ்சுகிறாள். இந்தப்பக்கம் பாண்டியன் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, சுகன்யா தன்னை நல்லவளாக காட்டிக்க பிளான் போடுகிறாள்.
அவர்களிடம் சக்திவேல் மாமா பொய் சொல்லி இருப்பாரோ. குமாரை வைச்சு அரசியை கடத்தி சொல்லிட்டு, இப்போ ஊருக்கு அனுப்பி வைச்சுட்டேன்னு பொய் சொல்றாரோ என்கிறாள். இதனால் மொத்த குடும்பமும் பரபரப்பாகிறது. இதனையடுத்து இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.