அந்த பெண் ஏன் அப்படி செய்தார் என்று தெரியவில்லை…!

 

நடிகர் துல்கர் சல்மானுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார்.

தற்போது கிங் ஆப் கோதா படத்தின் ரிலீஸுக்காக ப்ரோமோஷன் பணிகளில் துல்கர் சல்மான் பிசியாக இருக்கிறார்.அதில் நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்..அவை இப்போது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது..

துல்கர் சல்மானின் சமீபத்திய பேட்டியில் அவரது மோசமான ரசிகர் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் ஒரு வயதான பெண் எதற்காக என தெரியவில்லை அவ்வளவு மோசமாக நடந்துகொண்டார்.

என் பின்னால் அந்த இடத்தில் கைவைத்து அழுத்தினார் எனக்கு வலி மேடையில் பலரும் அங்கு இருந்தார்கள் அவரை என்ன சொல்வது என்று தெரியவில்லை கோபம் வந்தது…

ஆண்ட்டி தயவு செஞ்சு அங்க போய் நில்லுங்க என சொல்ல நினைத்தேன் அந்த அளவுக்கு மோசமாக நடந்துகொண்டார் பலரும் கையை எங்கே வைப்பது என தெரியாமல் பின்னால் வைக்கிறார்கள் இந்த சம்பவம் நடந்தபோது போட்டோவுக்கு சிரிக்க முடியாமல் நின்றேன் என துல்கர் சல்மான் கூறி இருக்கிறார் இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவமாம்.