விசித்ராவுக்கு நடந்தது போல் எனக்கும் மோசமான அனுபவம் ஒன்று நடந்தது : காதல் பட நடிகை அதிர்ச்சி தகவல்.!

 

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் தயாரித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகையை மறக்க முடியுமா என்ன ?

அதனைத் தொடர்ந்து பேராண்மை மற்றும் மழைக்காலம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாகவும் வலம் வந்தவர் இவர். தற்போது புஷ்கரா என்ற ஸ்டூடியோ ஒன்றை துவங்கி இருக்கிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் தன்னை தாக்கிய பூகம்பம் டாஸ்கில் விசித்ரா தனக்கு படப்பிடிப்பில் நடந்த பாலியல் சீண்டலை சொல்லினார். இது பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வார இறுதியில் கூட கமல் வந்து விசித்ராவையும், அவர் கணவரையும் பாராட்டி இருந்தார்.

விசித்ராவுக்கு நடந்தது போல் எனக்கும் மோசமான அனுபவம் ஒன்று நடந்தது என காதல் படத்தில் நடித்த சரண்யா கூறியுள்ளார். அவர் கூறியதாவது விசித்ராவுக்கு நடந்தது போது எனக்கு மோசமான அனுபவம் ஒன்று நடந்துள்ளது அதனை இப்பொழுது கூறினால் யாரும் காது கொடுத்து கூட கேட்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

சினிமாவில் பெயர் எடுத்திருக்கும் நடிகைகளும் பெரிய நடிகைகளும் புகார் கொடுத்தால் மட்டுமே எடுபடும் சின்ன நடிகைகள் சொன்னால் எடுபடாது அப்படியே வெளியே சொன்னாலும் மீடியா என்றாலே இப்படித்தான் இருக்கும்... அது தெரிந்து தானே வந்திருக்கிறாய் என மிகவும் கேவலமான பேசுவார்கள் இந்த பிரச்சனை சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இருக்கிறது.எனக்கு நிறைய படங்களில் இந்த பிரச்னை இருக்கிறது. பேராண்மை படத்தில் நான் நடித்த போது அத்தனை பாதுகாப்பாக ஃபீல் செய்தேன் எனவும் கூறி இருக்கிறார்.