எனக்கு ரொம்பவே பேட் பிரேக்கப் நடந்தது... அதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியவில்லை - ரம்யா பாண்டியன்..!  

 

அருண் பாண்டியனின் சகோதரர் துரை பாண்டியனின் மகள் தான் ரம்யா பாண்டியன். 2015ம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2016ம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான ஜோக்கர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதன் பின்னர், ஆண் தேவதை படத்தில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் போட்டோஷூட்களை நடத்தி வந்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கினார்.

33 வயதாகும் நடிகை ரம்யா பாண்டியன் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. பிக் பாஸுக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். மம்மூட்டியுடன் மலையாளத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்த அவர் அடுத்ததாக இடும்பன்காரி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது தங்கைக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்பது குறித்தெல்லாம் அவரது சகோதரி பேசியுள்ளார். திருமண வாழ்க்கையை புரிந்துக் கொண்டு தங்கையை கவனமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பான பையன் கிடைக்க வேண்டும். இந்த பிளேபாய் போன்ற பையன் எல்லாம் வேண்டாம் என அவரது அக்கா ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசும் போது, தனக்கு ரொம்பவே பேட் பிரேக்கப் நடந்தது. அதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியவில்லை. உடைந்து போய்விட்டேன். ஒல்லியாக எல்லாம் அதனால் ஆகிவிட்டேன். என் அக்கா தான் அம்மா மாதிரி இருந்து என்னை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார் என உருக்கமாக பேசியுள்ளார். உள்ளாடை அணிந்தபடியெல்லாம் படுபோல்டாக சமீப காலமாக ரம்யா பாண்டியன் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமை சூடாக்கி வருகிறார். இந்நிலையில், அப்படியொரு போட்டோவை அவருடைய அக்காவிடம் காட்ட இதுக்கு என்ன கமெண்ட் சொல்றதுன்னே தெரியல என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார். அக்கா மூலமாகத்தான் கோயில்களுக்கு எல்லாம் போக ஆரம்பித்தேன் என்றும் ஆன்மிகத்தின் மீது திடீரென தனக்கு ஆர்வம் வரவும் அவர் தான் காரணம் என்றும் ரம்யா பாண்டியன் கூறியுள்ளார். சீக்கிரமே நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்துக் கொள்வார் என்றே தெரிகிறது.