அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் பிளான் இருக்கு... ப்ரியா பவானி சங்கர் சொன்ன குட் நியூஸ்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நாயகி ஆக நடித்தவர் தான் ப்ரியா பவானி சங்கர்.
இவருக்கு இந்த சீரியலில் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த மேயாத மான் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஹாஸ்டல், யானை, ஓ மணப்பெண்ணே, திருச்சிற்றம்பலம், என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பவானி சங்கர், ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள டிமான்டி காலனி 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போதும் இவரின் கைவசம் நிறைய படங்கள் காணப்படுகின்றது.
இந்த நிலையில் காதலருடன் டேட்டிங் செய்வதில் ஆர்வம் காட்டும் ப்ரியா பவானி சங்கர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது திருமணம் பற்றி பேசியுள்ளார்.
அதில் திருமணம் பண்ணனும் என கூறிய பிரியா பவானி சங்கர் கொஞ்சம் இழுத்தப்படியே உண்மையில் திருமணம் தாமதமாக காரணம் சோம்பேறித்தனம் தான். வெட்டிங் பிளான் பண்ணனும் பர்ச்சேஸ் போன்ற பல வேலைகள் இருக்கு. ஒருவேளை காலேஜ் முடிச்ச உடனே திருமணம் செய்து வைங்கனு சொல்லி இருந்தா இந்நேரம் முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.
எப்படியும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள பிளான் இருப்பதாக, அதை தற்போது தான் முதல்முறையாக கூறுவதாகவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.