நல்ல மாப்பிளை பார்க்குறேன்.. சபதம் எடுத்த முத்து... அருண் - சீதா காதலை சேர்த்து வைக்க முடிவெடுத்த மீனா! 

 

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் சீதாவின் காதலருக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என போன் போட்டு கேட்டு வாங்கிட்டு வருகின்றனர் முத்து, மீனா. மற்றொரு பக்கம் அருண், என்ன இப்படியெல்லாம் கேட்டு வாங்கிட்டு வராரு என கேட்கிறான். அவளும், என் மாமா ஒரு தடவை அன்பு வைச்சுட்டா போதும். ரொம்ப பாசமா பார்த்துப்பாரு என சொல்கிறாள்.

இதனால் அருணுக்கும் சீதாவின் மாமாவை பார்ப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறான். இதனையடுத்து முத்து, மீனா இருவரும் கோவிலுக்கு வந்து விடுகின்றனர். அப்போது முத்துவை உள்ளே போக சொல்லிவிட்டு பூ வாங்க போகிறாள் மீனா. அவனும் உள்ளே வந்து சீதாவை தேடி கொண்டு இருக்கிறான். மற்றொரு பக்கம் அருண் போன் வரவும் தனியாக போகிறான். அப்போது அவனும் முத்துவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொள்கின்றனர்.

நல்ல காரியத்துக்கு வந்து இவன் மூஞ்சில முழிச்சுட்டோமே என இருவரும் அப்செட் ஆகின்றனர். இதனையடுத்து முத்து வேகமாக வந்து மீனாவிடம் நம்ம வேற எங்காயவது வைச்சு மாப்பிளையை பார்க்கலாம். இங்க வேண்டாம் என சொல்கிறான். மீனா ஏன் என கேட்க, அந்த டிராபிக் போலீஸ் வந்து இருக்கான் என சொல்கிறான். மற்றொரு பக்கம் அருண் அப்செட்டாக இருக்க, என்னங்க ஆச்சு என சீதா விசாரிக்கிறாள்.

அந்த ரவுடி வந்து இருக்கான். அவனை பார்த்துட்டேன் என எரிச்சலாக சொல்கிறான். அதனை தொடர்ந்து முத்து, மீனாவை சீதா பார்த்து விட அவர்களை கூப்பிடுகிறாள். அருணையும் கூப்பிட்டு அறிமுகப்படுத்த ஒருத்தரை ஒருத்தர் பார்த்து அதிர்ச்சியில் உறைகின்றனர். சீதா இது எதுவும் தெரியாமல் இவர்தான் அக்கா. நம்ம எங்காவது ஹோட்டலுக்கு சாப்பிட போகலாமா. இங்க அவருக்கு பிடிக்காத ரவுடி ஒருத்தன் வந்து இருக்கானாம் என சொல்கிறாள்.

முத்து டென்ஷனாகி எதுவும் பேசாமல் அங்கிருந்து போகிறான். சீதா உடனே என்னக்கா ஆச்சு? மாமா எதுவும் சொல்லாம போறாரு என கேட்கிறாள். அவர் சொன்ன ரவுடி உன் மாமா தான் என சொல்லிவிட்டு முத்து பின்னாடி ஓடுகிறாள். அவனிடம் வாங்க எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் என சொல்கிறாள். அதற்கு அவன் இதுல பேச எதுவும் இல்லை. இது சரிப்பட்டு வராது. சீதாக்கிட்ட சொல்லு என கூறிவிட்டு போய்விடுகிறான்.

இந்தப்பக்கம் அருண் இந்தாளு தான் உன் மாமாவா. இவனால தான் ரெண்டு தடவை நான் டிஸ்மிஸ் ஆனேன் என்கிறான். அப்போது மீனா வந்து சீதாவை அங்கிருந்து அழைத்து போகிறாள். முத்து நேராக மீனாவின் வீட்டுக்கு வருகிறான். சீதாவின் காதல் பற்றி சொல்லி, அந்தாளு சரி கிடையாது. ஈகோ பிடிச்சவன். சீதா நல்ல பொண்ணு தான். ஆனால் இது சரியா வருது. நான் வேற நல்ல பையனா பார்க்குறேன். சீதாக்கிட்ட நீங்க பேசுங்க என கூறிவிட்டு கிளம்புகிறான்.

அவன் போன பிறகு மீனா, சீதா அங்கு வருகின்றனர். அவர்கள் வந்ததும் மீனாவின் அம்மா சீதா அடி பின்னுகிறார். மீனா அவளை தடுத்து சீதா அவரை விரும்பிட்டா. கல்யாணம் பண்ணி வைங்க. நான் அவர்க்கிட்ட பேசுறேன் என்கிறாள். அதற்கு அவள் அம்மா, இந்த வீட்ல எதுவா இருந்தாலும் மாப்பிள்ளை தான் முடிவு பண்ணுவாரு என உறுதியாக சொல்லிவிடுகிறாள். இப்படியாக நிறைவடைந்தது.

<a href=https://youtube.com/embed/4Wswl4N3s7E?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/4Wswl4N3s7E/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">