ரஜினி சார் பயோபிக் பண்ணனும் ஆசை..! பிரபல இயக்குநர் ஷங்கர் பேச்சு..!
Jan 10, 2025, 06:05 IST
ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாக உள்ளது.படக்குழு மிகவும் பரபரப்பாக ப்ரோமோஷன் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றது.பொங்கல் முன்னிட்டு வெளியாகும் இப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது மீடியா ஒன்றில் நேர்காணல் ஒன்றில் ஈடுபட்டுள்ள இயக்குநர் ஷங்கர் இடம் பயோ பிக் பண்ணுற ஐடியா இருக்கா என நேர்காணல் செய்பவர் கேட்டதற்கு ஆம் என கூறியுள்ளார்.
அவ்வாறு பயோபிக் படம் ஏதும் செய்வதாயின் அது ரஜினி சார் பயோ பிக் தான் அதை தான் செய்ய விரும்புகின்றேன் என கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் ஆகிய நிலையில் ரஜினி வாழ்க்கை வரலாறு எனும் கதை மிகவும் அருமையாக இருக்கும் என ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்துள்ளனர்.