இந்த படத்தை ரொமான்டிக் காமெடி படம் என்று நான் சொல்ல மாட்டேன் - கிருத்திகா உதயநிதி!
கடந்த 2013 ஆம் ஆண்டு வணக்கம் சென்னை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கிருத்திகா உதயநிதி.
அதைத்தொடர்ந்து இவர் காளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் ஜெயம் ரவி நடிப்பில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன், லால், வினய் ராய் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இந்த படமானது வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.