நான் அரசியலுக்கு வந்தா தாங்க மாட்டீங்க... முதல்வரை வம்புழுத்த பிக்பாஸ் நடிகர் !
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர் பாலாஜி. சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றவர், மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அதிலிருந்தே தனது வாழ்க்கை தொடங்கினார். கடந்த 2017ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் பெர்பெக்ட் பட்டங்களை பெற்று மாடலிங் துறையில் புகழ்ப்பெற்றார்.
அதன்பிறகு ‘டைசன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். திரையுலகில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் கடந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் மீது பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள், ஷிவானி மீது காதல் என புகார்கள் இருந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரன்னர் ஆனார்.
இதற்கிடையே தனது வாழ்க்கை குறித்தும், தந்தை போதைபொருளால் மரணமடைந்தது குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆன் ரம்மியை டாஸ்மாக்கால் அதிக குடும்பங்கள் சீரழிகிறது. முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள்.
குடியால் என்னை போல் ஆதரவற்ற நபர்கள் ஏராளமானோர் உள்ளனர். என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். வந்தால் தாங்க மாட்டீங்க என தடாலடியாக கூறியுள்ளார். பாலாஜி முருகதாஸின் இந்த ட்வீட் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.