நான் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவரை திருமணம் செய்து இருப்பேன் - கன்னட சூப்பர் ஸ்டார்..!
Apr 18, 2025, 06:35 IST
ரஜினி காந்தின் "ஜெயிலர்" படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்த சிவராஜ் குமார் அடுத்ததாக அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். இதன்போது கமல்ஹாசன் பற்றிய தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ள அவர் “கமல்ஹாசன் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவரை தான் திருமணம் செய்து இருப்பேன்" என்று கூறி கமலின் மீது கொண்ட காதலையும் புகழையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சிவராஜ் குமாரின் இந்த வெளியீடு பலரையும் ஆச்சரியத்துடன் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக அவரது ரசிகர்கள் மற்றும் கமல்ஹாசனின் ரசிகர்களிடையே இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.