சூர்யா எனக்கு அண்ணனாகவோ தம்பியாகவோ இருந்திருந்தால் பளார் என அறைந்திருப்பேன் - பிரபல பத்திரிகையாளர் ஆதங்கம்..!

 

தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர்  தான் சூர்யா. அவர் பல விமர்சனங்களை சந்தித்தாலும் தற்போது தனது திறமையின் மூலம் படிப்படியாக வளர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சூர்யா நடிப்பில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனாலும் அன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீப காலமாகவே ஜோதிகா சூர்யாவை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதாவது ஜோதிகாவின் பேச்சைக் கேட்டு தான் சூர்யா மும்பையில் செட்டில் ஆகிவிட்டார், ஜோதிகாவும் சிவகுமார் உடன் பேசுவதில்லை, சென்னைக்கு வந்தாலும் அவர்களுடைய வீட்டுக்கு செல்வதில்லை என கூறப்பட்டது. ஆனால் அதில் எந்தவித உண்மை இல்லை என சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள் சொல்லியுள்ளார்கள்.

அத்துடன் சமீபத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பில் சூர்யா ஜெட் விமானம் ஒன்றை வாங்கி உள்ளார். அதற்கும் சூர்யா ஜோதிகாவும் மௌனம் காத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜெட் விமானம் வாங்கி என்ன பயன்? சிவக்குமார் போல சூர்யாவால் சினிமாவில் நல்ல பெயரை எடுக்க முடியுமா? அவரால் எடுக்கவே முடியாது. சூர்யாவிடம் பல கோடி பணம் இருக்கிறது. அதனால் தான் இப்படி பெருமைக்கு செய்கின்றார்.

முதலில் ஜெட் விமானம் எதற்கு? சூர்யா தனது மனைவிக்கு புடவையும் ஜாக்கெடும் வாங்கி கொடுக்க வேண்டும். சூர்யா நம்ம வீட்டுப் பையன். அவர் தவறு செய்தால் நாம் தான் கண்டிக்க வேண்டும். சூர்யா எனக்கு அண்ணனாகவோ தம்பியாகவோ இருந்திருந்தால் பளார் என அறைந்திருப்பேன்.

ஞானவேல் ராஜா ஒரு வியாபாரி. அவர் சூர்யாவுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.