நம்ம ஊருல ஜேசிபி வந்தாவே கூட்டம் கூடும்... புஷ்பா 2க்காக கூட்டம் கூடுறது பெரிய விஷயம் இல்லை - நடிகர் சித்தார்த்..!  

 

நடிகர் சித்தார் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மிஸ் யூ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நேரத்தில் இவரிடம் புஷ்பா- 2 திரைப்பட ப்ரோமோஷன்பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மதன் கௌரி கேள்வி கேட்டார். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 

இந்தியாவில் கூட்டம் கூடுவது பெரிய பிரச்சினை இல்லை. அது ஒரு மார்க்கெட்டிங் தான். நம்ம ஊருல கட்டிடம் வேளைக்கு ஜேசிபி வந்தா கூட கூட்டம் கூடும் புஷ்பா 2க்காக பீகார்ல கூட்டம் கூடுறது பெரிய விஷயம் இல்லை. ஒரு பெரிய கிரவுட் போட்டு விளம்பரம் செய்தால் கூட்டம் கூடும். அதுக்காக அவங்களுக்கு ஒரு பாட்டு இருக்கு படம் இருக்குனா அது ஓகே.

ஆனா இந்தியால கூட்டம் கூடுவதற்கும் படத்தின் குவாலிட்டிக்கும் சம்மந்தம் இல்லை. அப்டினு பார்த்தா எல்லா அரசியல் கட்சியும் ஜெயிக்கணுமே எல்லா கட்சி மீட்டிங்கும் கூட்டம் கூடுது. பிரியாணி, குவாட்டருக்காகவும் கூட்டம் கூடும், கை தட்டு வாங்குறது பெரிய விஷயம் இல்லை அது சுலபமான வேலை தான் என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.