இப்படியே நடந்தால்... இது தவெக கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் - அலர்ட் கொடுத்த பிஸ்மி.! 

 

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியில் இணைவதற்காக ஆரம்பத்தில் ஆப்ஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயின் ரசிகர்களில் கோடிக்கணக்கானோர் கட்சியின் உறுப்பினராக இணைந்தார்கள்.

இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கை, கொடி, பாடல் என ஒவ்வொன்றையும் அதிரடியாக வெளியிட்டிருந்தார் விஜய். இது தமிழகத்தில் உள்ள ஏனைய அரசியல் தலைவர்களுக்கு பேரிடியாக காணப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் விசாகசாலையில் விஜய் நடத்திய மாநாடு மிகப்பெரிய அளவில் வைரலானது. அதில் பல்லாயிரக்கணக்கானோர் விஜயின் பேச்சைக் கேட்பதற்காக குவிந்திருந்தனர். இதில் பல சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் அதில் விஜய் கொடுத்த வாக்குறுதி எல்லாம் மக்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தன.

இந்த நிலையில் விஜய் இதனை செய்யவில்லை என்றால் அவரது கட்சியை காப்பாற்றுவது கஷ்டம் என்று விஜய்க்கு  வலைப்பேச்சு பிஸ்மி ரெட் அலர்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், தமிழக வெற்றி கழகத்தின் கட்சி தொடர்பான கூட்டங்களின் போது எந்தவிதமான தகுதியும் இல்லாத சிலரை மேடைக்கு பேசுவதற்கு அழைக்கின்றார்கள். இது தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும்.

அதிலும் 20 வருடங்களுக்கு முன்பு படங்களை தயாரித்த இயக்குனர் ஒருவர், இன்னும் அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு பல விவாத மேடைகளில் பங்கேற்கின்றார். அவர் பங்கேற்கும் விவாத மேடைகளில் நான் பங்கேற்பது இல்லை. அதற்கு காரணம் முட்டாள்களோடு கதைப்பதற்கு நான் தயார் இல்லை.

ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியில் பேசுவதற்கு ஆளில்லை என்றால் ரோட்டில் செல்பவர்களை கூட அழைத்து பேச வைப்பதற்கும் தற்போது தயாராக உள்ளார்கள். இது விஜய்க்கு   ஆபத்தை விளைவிக்கும். இப்படி ஆனவர்களை கட்சியில் சேர்த்து விவாதிக்க விட்டால் மக்கள் விஜய்க்கும் மரியாதை கொடுக்க மாட்டார்கள்.

எனவே தமிழக வெற்றி கழகத்தின் கட்சியில் பேசுபவர்களும் மரியாதைக்குரியவர்களாக இருக்க வேண்டும். இல்லை என்றால் விஜய்யின் கட்சியை காப்பாற்றுவது கஷ்டம் என்று பிஸ்மி தனது பேட்டில் தெரிவித்துள்ளார்.