திருட்டை தடுக்க புதிய தொழில்நுட்பத்தில் களமிறங்கிய இளையராஜா..!

 

உலகெங்கிலும் இருக்கும் ரசிகர்கள் தனது பாடல்களை உயர்தர தொழில்நுட்பத்தில் கேட்கும் விதமாக புதிய செயலியை துவங்கியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

இளையராஜா பாடல்கள் காலம் கடந்தாலும் தனி மதிப்பு பெற்றவையாக உள்ளன. நம்மில் பலரும் அவருடைய பாடல்களை பலரும் தங்களுடைய காலர் ட்யூன்களாகவும் ரிங் டோன்களாகவும் தங்களுடைய செல்போனில் வைத்துள்ளோம்.

இந்த வசதியை வழங்கும் செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் அதற்கென தனியாக பணம் வசூலித்து வருகின்றன. மேலும் சிலர் இளையராஜாவின் பாடல்களை நவீன முறையில் தர மேம்படுத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

யூ-ட்யூப் பக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா  தனக்கென சேனலை உருவாக்கி, தன்னுடைய பாடல்களை நவீன முறையில் மேம்படுத்தி பதிவிட்டு வருகிறார். மற்றவர்கள் அவருடைய பாடல்களை இணையத்தில் பதிவேற்றுவதற்கு இளையராஜாவிடம் இருந்து அனுமதி பெற்றார்களா என்பது தெரியாது.

இதற்கென தனியாக வரம்புகளை உருவாக்கும் நோக்கில் புதிய செயலியை துவங்கியுள்ளார் இளையராஜா. அதன்படி தனது பாடல்களை உயர்தர தொழில் நுட்பத்தோடு பதிவு செய்து, செயலியில் பதிவேற்றவுள்ளார். இது இளையராஜா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.