நான் இவங்கள மாதிரி இல்லை..! எத்தனை கோடி கொடுத்தாலும் திருமணத்தில் நடனமாட மாட்டேன்..!
பாலிவுட் திரையுலகமே குவிந்தது என்பதும் குறிப்பாக சல்மான் கான், ஷாருக்கான், அக்சய்குமார் உள்பட பல பிரபலங்கள் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார்கள் என்பதும் தெரிந்தது.
இந்த நிகழ்ச்சிகள் நடனமாட ரிஹானா உட்பட பல பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை முகேஷ் அம்பானி வாரி வழங்கினார் என்பதும் மூன்று நாட்கள் ஒரு மிகப்பெரிய திருவிழா நிகழ்ச்சி போல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமணம் உள்பட எந்த திருமண நிகழ்ச்சியிலும், எத்தனை கோடி கொடுத்தாலும் நான் நடனம் ஆட மாட்டேன் என்றும் பாடகி லதா மங்கேஷ்கர் ஒரு முறை அளித்த பேட்டியில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருமண நிகழ்ச்சியில் பாட மாட்டேன் என்று கூறினார், அதே கொள்கையை தான் நானும் கடைப்பிடிக்கிறேன். எனக்கும் எத்தனை கோடி கொடுத்தாலும் திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு டான்ஸ் ஆட மாட்டேன் என்று நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார்.திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்கு பல வாய்ப்புகள் எனக்கு வந்த போதிலும் நான் அதை தவிர்த்து விட்டேன் என்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூட டான்ஸ் ஆட மறுத்து விட்டேன் என்றும் எனக்கு அப்படிப்பட்ட பணம் தேவையில்லை என்றும் நல்ல முறையில் உழைத்து சம்பாதித்த பணம் எனக்கு போதும் என்றும் இதை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ள கங்கனாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அந்த அதிருப்தியில் தான் அவர் இவ்வாறு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.