முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்..! கவலையில் சிறகடிக்க ஆசை நாயகன் வெற்றி..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல்களில் பொன்னி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் ஆறு நாட்களும் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. சுமார் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டு வந்த இந்த சீரியலில் சபரி நாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் இதில் கதையின் நாயகியாக வைஷ்ணவி நடித்து வருகிறார்.
பொன்னி சீரியலை நீரவி பாண்டியன் இயக்கி வருகிறார். கதையை பிரியா தம்பி எழுதுகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது பொன்னி சீரியலுக்கு விஜய் டிவி எண்டு கார்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அநேகமாக அடுத்த மாதத்தோடு பொன்னி சீரியல் முடிவடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னி சீரியல் முடிவுக்கு வருவதால் ரசிகர்கள் மட்டுமின்றி, சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்தும் சோகத்தில் உள்ளாராம். ஏனெனில் அவரது மனைவி வைஷ்ணவி சுந்தர் நாயகியாக நடித்து வந்த சீரியல் இது. அண்மையில் தான் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், தன் மனைவி நடித்து வந்த சீரியல் முடிவுக்கு வருவதால் தான் வெற்றி வசந்த் கவலையில் உள்ளாராம். இருப்பினும் அவர் நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.