எஸ்.எஸ். ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தின் முக்கிய அப்டேட்..!!

ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் மகேஷ் பாபு படம், மொத்த மூன்று பாகங்களாக தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு உலகளவில் வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதும் படத்துக்கு கிடைத்தது. பல்வேறு சர்வதேசளவிலான விருதுகள் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கிடைத்தன.

இதன்மூலம் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ராஜமவுலி மாறியுள்ளார். இதையடுத்து அவருடைய அடுத்த படத்துக்கு உலகளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன்காரணமாக தனது அடுத்த படத்தை அவர் உலகத்தரத்துக்கு உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ராஜமவுலியின் அடுத்த படத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாகவும், அது ஜேம்ஸ் பாண்டு போல அதிரடியான துப்பறியும் படமாக தயாராகவுள்ளதாக கூறப்பட்டது. இதையொட்டு #SSMB29 என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வர துவங்கியது. இதை படக்குழுவினரும் உறுதி செய்தனர்.

இந்த படத்துக்கான படப்பிடிப்பு நடப்பாண்டு இறுதியில் ஆப்ரிக்காவிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் துவங்குவதாக கூறப்படுகிறது. அதற்கான கதை மற்றும் திரைக்கதை எழுதும் பணிகளில் ராஜமவுலி தீவிரம் காட்டி வருகிறார். இதுவரை வெளியான இந்தியப் படங்களில், அதிக பட்ஜெட் கொண்ட படமாக எஸ்.எஸ்.எம்.பி 29 படம் அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தில் மகேஷ் பாபு கதாபாத்திரம் உருவாவதற்கு கடவுள் ஆஞ்சநேயர் தான் காரணம் என ராஜமவுலி கூறியுள்ளார். ஏற்கனவே ராஜமவுலி கதைகளில் வலதுசாரி சிந்தனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை வலுவாக்கும் விதமாக இந்த தகவல் அமைந்துள்ளது.

எஸ்.எஸ்.எம்.பி 29 படம் மொத்தம் 3 பாகங்கள் கொண்ட கதையாக தயாராகிறது. இந்த படத்தை கே.எல். நாராயணா என்பவர் தயாரிக்கும் நிலையில், டிஸ்னி மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணை தயாரிப்பு பணிஅக்ளை மேற்கொள்கின்றன. வரும் 2025-ம் ஆண்டு எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் முதல் பாகம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.