இந்த படத்திற்கு இந்தியன் 2 பரவாயில்லை! செய்யாறு பாலா அதிரடி!

 

இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவான கேம்சேஞ்சர் திரைப்படத்தின் கதையினை இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் எழுதியுள்ளார். நடிகர் ராம்சரண்,கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் குறித்து பலரும் பேசிவரும் நிலையில் விமர்சகர் செய்யாறு பாலா இவ்வாறு அதிரடியான விமர்சனம் செய்துள்ளார்.

செய்யாறு பாலாவின் டுவிட்டில் " தெலுங்கு படம் தான் அதுக்காக இப்படியா? ஹெலிகாப்டர்ல இருந்து லுங்கி கட்டி இறங்கும்போதே டவுட் வந்துச்சு என்னமோ இருக்குனு. கேம் சேஞ்சர் இல்ல இது கேம் ஜோக்கர். இதுக்கு இந்தியன் 2 வே பரவாயில்லைன்னு தோணுது.

மனசாட்சி இல்லையா உங்களுக்கு பிரமாண்டம் வேணும் அதுக்குன்னு இப்படி அவசியம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் டுவிட்டை பார்த்த ரசிகர்கள் விமர்சம் சொல்லி இந்தியன் 2, கங்குவாவை கெடுத்தது நீங்க இந்த படம் சரி ஓடட்டும் விட்டுருங்க என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

<a href=https://youtube.com/embed/m6_fd_Kivjo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/m6_fd_Kivjo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">