இன்று இந்தியன் 2 படத்திலிருந்து புதிய லிரிக்கல் வீடியோ வெளியீடு…!!

 

இந்தியன் 1 வெளியாகி தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தையும் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடித்திருக்கிறார். படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன.

அண்மையில் இப்படத்தின் இசை வௌியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து கதறல்ஸ் என்ற புதிய லிரிக்கல் வீடியோ பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.