ரிலீசுக்கு முன்னே  210 கோடிக்கு விற்பனையான இந்தியன் 2 ?

 

 27 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் இந்தியன்.இந்த படத்தில் அப்பா கமல்ஹாசனுக்கு நடிகை சுகன்யா ஜோடியாகவும், மகனாக நடித்த கமல்ஹாசனுக்கு மனிஷா கொய்ராலா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நெடு முடி வேணு, செந்தில், கவுண்டமணி, உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி ‘இந்தியன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இரண்டாம் பாகம் உருவாவதை கமலஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு உறுதி செய்தனர். மேலும் இப்படத்தில் படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட போதிலும்
தற்போது வரை முடிவடையாமல் உள்ளது.

இந்தியன் 2 படத்தை இயக்கி முடிப்பதற்குள் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்ததால் இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்காமல்…ராம் சரணின் புதிய படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்ட துவங்கினார். இதை தொடர்ந்து, இந்தியன் 2 படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று, மீண்டும் இயக்குனர் ஷங்கரை இப்படத்தை இயக்க வைத்தது…ஒரு வழியாக இப்போது நல்ல படியாக சென்று வருகிறது..

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் Digital Rights குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி பிரபல ott தளம் நெட்பிளிக்ஸ் இப்படத்தின் அனைத்து மொழி Digital Rights ரூபாய் 210 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்…அதனால் இந்த படம் வெளிவரும் முன்னே லாபம் என சொல்லப்படுகிறது..