இந்தியன் 2 ரிலீஸ் செய்வதற்கு பதில் இந்தியன் படத்தை ரீ-ரிலீஸ் பண்ணி இருக்கலாம்..! ரச்சிதா விமர்சனம்..! 

 
இந்தியன் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக வெளியானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும்.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை பார்த்த பிக் பாஸ் பிரபலம் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த படத்தை பார்த்து நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன். இதற்குப் பதில் இந்தியன் படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். தற்போது இவருடைய பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.