வலைப்பேச்சு அந்தணன் பேட்டி : வடிவேலு இன்னும் திருந்தல..!

 

 நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டி ஒன்றில் ,வடிவேலு பற்றிய பல்வேறு விஷயங்களை கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் வடிவேலு சிங்கமுத்து மேல் வழக்கு தொடர்ந்தார். மேலும் சிங்கமுத்து மான நஷ்டமாக ஐந்து கோடி ரூபாயை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த சிங்கமுத்து, நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான் தான் காரணமாக இருந்தேன். நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக கூறினார். அவரைப் பற்றி பேட்டிகளில் பேச தடை கேட்பதற்கு அவருக்கு எந்த உரிமையும்  இல்லை என்று சிங்கமுத்து தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி வழங்கியுள்ளார். அதில் அவர் கூறுகையில், வடிவேலுவின் ஆரம்ப காலத்தில் சிங்கமுத்து இல்லை. அவருடைய இடைப்பட்ட காலத்தில் தான் வந்தார். அதன்பின்பு நகைச்சுவை மேலும் எகிறியது. ஆனால் வடிவேலுவின் குழு தனியாக பிரிந்து போன பிறகு வடிவேலு நம்மை எல்லாம் சிரிக்க வைக்கவில்லை இதுதான் உண்மை.

வடிவேலுவின் அந்த கூட்டம் இருந்தபோது நகைச்சுவை அழியாததாக காலத்திற்கும் பேசப்பட்டது. அப்போது வடிவேலுவிடம் இருந்த திறமைகள் அனைத்தும் அந்த கூட்டத்தோடு போய்விட்டது. இதனால் சிங்கமுத்து வடிவேலுவின் வெற்றிக்கு என் பங்கு அதிகம் என்று சொல்லியதில் தவறே  இல்லை அது மிகவும் சரியானது.

மேலும் வடிவேலு பத்து வருடத்திற்கு முன்பே 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவார். ஆனால் பதினோரு மணிக்கு வந்து காமெடி தொடர்பில் அனைவரிடமும் பேசுவார். 12 மணிக்கு ஒரு காட்சியில் நடித்து விட்டு கொஞ்சம் தூங்குவார். மீண்டும் ஒரு காட்சியில் நடித்துவிட்டு 5 மணிக்கு சென்று விடுவார். அவர் அதிகபட்சமாக மூன்று மணி நேரம் தான் கேமரா முன்னாடி நிற்பார். இதனால் பல தயாரிப்பாளர்கள் அவருக்கு வயிறு எரிந்து தான் சம்பளத்தை கொடுப்பார்கள்.

வடிவேலு இப்படியெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் அவருடைய மார்க்கெட் போய் இருக்காது. 5 வருடம் வீட்டில் சும்மா இருந்த போதும் அவர் திருந்தவில்லை. அதே  வேலையை தான் செய்தார். மக்கள் ஒதுக்கி வைத்து விட்டார்கள் நமது நகைச்சுவையை  ரசிக்கவில்லை என்று கொஞ்சம் ஆவது மக்களை மனதில் வைத்து நடிக்க வேண்டும்.

வடிவேலு  ஒரு நல்ல படத்தில் நடித்து விட்டார். தற்போது சுந்தர் சியுடன் இணைந்துள்ளார் வடிவேலு. இதனால் இந்த படம் வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் அவர் தன்னை மாற்றிக் கொண்டு சில சமரசங்களை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அந்தணன்.

<a href=https://youtube.com/embed/UHYiuEYB3ak?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/UHYiuEYB3ak/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">