வரு கணவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா? அப்பா சரத்குமாரை விட பணக்காரரா?

 
சமீபத்தில் நிக்கோலாய் சச்தேவ் - வரலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இருவருக்கும் தாய்லாந்தில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்காக தற்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

39 வயது வரலட்சுமிக்கும், 38 வயது நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் நடைபெற உள்ள திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணம் ஆகி பெண் குழந்தையுடன் இருக்கும் நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தற்போது வரலட்சுமியை திருமணம் செய்ய போகிறார். ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் இந்த திருமணம் நடைபெற உள்ளது என்பதும் அதன் பிறகு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரலட்சுமி வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் சொத்து மதிப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது. அவருக்கு 85 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வரலட்சுமி இடம் கோடிக்கணக்கான சொத்து மதிப்பு  இருக்கிறது என்பதும் தெரிந்தது.

மேலும் சரத்குமாருக்கு ரூ.55 கோடி சொத்து இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை விட வரலட்சுமி வருங்கால கணவருக்கு அதிக சொத்து மதிப்பு இருப்பதாக தெரிகிறது.