விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலகுகிறாரா கதிர் ?
 

 

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் குமரன். சமீபத்தில் வதந்தி இணைய தொடரில் நடித்து புகழ் பெற்றவர் இவர். சமீப நாட்களாக அதிக படங்களில் நடிப்பதையே அவர் விரும்புவதாகவும் இதனால் சீரியலிலிருந்து விலகப் போவதாகவும் கூறப்படுகிறது. இப்போது மாயத் தோட்டா எனும் இணையத் தொடரிலும் நடித்திருக்கிறார் குமரன்.

சினிமாவுக்கும் அப்படியே ஓடிடி தொடர்களிலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி வருவதால் சீரியலிலிருந்து அவர் வெகு சீக்கிரம் ஒதுங்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் பலரும் கதிருக்காகத் தான் இந்த நாடகத்தை பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மரணமடைய, அவருக்கு பின் வந்தவரும் விலகிவிட இப்போதுதான் புதிதாக முல்லையைத் தேர்ந்தெடுத்தார்கள்.


இதுகுறித்து குமரன் தரப்பில் எந்த விளக்கமும் இல்லை என்பதால் இதை உண்மைச் செய்தியாகவும் கருதமுடியாது. அவர் தரப்பிலிருந்தோ அல்லது சீரியல் தரப்பிலிருந்தோ தகவல் வரும்வரை எதுவும் உண்மை இல்லை என்றே எடுத்துக் கொள்வோம்.