விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆபீஸ்’ சீரியல் மதுமிலாவா இவர்? இப்படி குண்டாகிவிட்டாரே?

 

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதுமிலா தொலைக்காட்சி நடிகை, தொகுப்பாளினி மற்றும் மாடல் துறையில் பணிபுரிந்தார் என்பதும் கடந்த 2012 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சி மூலம் அறிமுகமாகி அதன் பிறகு 'ஆபீஸ்’ சீரியல் மூலம் பிரபலமானார்.

மேலும் விஷால் நடித்த ’பூஜை’ ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ’தாயுமானவன்’ ’அக்னி பறவை’ ’அச்சம் தவிர் போன்ற சீரியல்களில் நடித்த இவர் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் ’ஆண்மை’ என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.