சிறு வயது குந்தவையாக நடித்தவர் இந்த பிரபலத்தின் மகளா..??

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் சிறு வயது குந்தவையாக நடித்த சிறுமி தொடர்பான பின்னணித் தகவல்கள்  வெளியாகி திரையுலகினரை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் முதல் பாகத்தை விடவும், இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இதனால் படத்தின் கலெக்‌ஷனில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் மட்டுமே இருந்தன. இரண்டாம் பாகத்தில் தான் கதையின் முடிச்சுகள், அதற்கு காரணமானவர்கள், அதற்குரிய தீர்வுகள் உள்ளிட்டவற்றை நோக்கி கதை பயணிக்கிறது. அதன்படி பி.எஸ் 2-வில் ஒரு சிறிய பிளாஷ்பேக் போர்ஷன் வருகிறது. 

அதில் சிறு வயது குந்தவையாக நடித்த சிறுமி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளார். இளம் வயது குந்தவை த்ரிஷாவைக் காட்டிலும், அந்த சிறு வயது குந்தவை அழகாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறிய பெண் யார் என்கிற விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

சிறு வயது குந்தவையாக நடித்தவரின் பெயர் நிலா. இவர் பிரபல இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதி மற்றும் சீரியல் நடிகை கன்யா பாரதியின் மகள் ஆவார். இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.