‘தில்லு முல்லு’ படத்தின் கதாநாயகியா இவங்க.. ஆளே அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க..!  

 

1981-ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மாதவி. அந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அந்த படத்திற்குப் பின் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அதன்படி தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம் மற்றும் காக்கி சட்டை பல படங்களில் நடித்து சூப்பர் டிப்பர் ஹிட் கொடுத்தார். அதன் பிறகு இவர் 1996-ம் ஆண்டு தொழிலதிபர் ரால்ப் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

அதன் பிறகு இவர் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 3 டிபானி சர்மா, பிரிசில்லா சர்மா, ஈவலின் சர்மா மகள்கள் உள்ளனர். மகள் பிரிசில்லா ஷர்மாவுடன் மாதவி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

மாதவியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் நம்ம மாதவியா இது? ஆள் அடையாளமே தெரியலையே! என ஆச்சரியத்துடன் புகைப்படங்களுக்கு லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.