கே.பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு'  படத்தில் 41 நாள் குழந்தையாக நடித்தவர் இந்த பிரபல நடிகையா?

 

1983 ஆம் ஆண்டு வெளியான ’முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் பாக்யராஜின் 41 நாள் குழந்தையாக நடித்தவர் சுஜிதா. ’முந்தானை முடிச்சு’ படத்திற்கு பிறகு சத்யராஜின் ’பூவிழி வாசலிலே’ ரஜினியின் ’மனிதன்’ மோகன் நடித்த ’பாடு நிலாவே உள்பட கால திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன்பின் அவர் ’ரோஜா’ ’தேவர் மகன்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பதும் தற்போது தொலைக்காட்சிகளில் பிரபல நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்து வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடர் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுஜிதா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இவரது பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள். இவருக்கு சூர்யா கிரண் என்ற சகோதரரும் சுனிதா என்ற சகோதரியும் உள்ளனர். இவர் திரையுலகை சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.