ஓ.டி.டி-யில் வெளியாகும் ஹரீஷ் கல்யாண் படம்- இதுதான் காரணமா..?

 
ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓடிடியில் ரிலீஸ் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், புதிய படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸாகவது தொடர்ந்து வருகிறது.

கடந்த விநாயகர் சதுர்த்தி நாளில் விஜய் சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’ படம் டிவியில் நேரடியாக வெளியானது. அதேநாளில் ஓடிடி-யிலும் வெளிவந்தது. கடந்த வாரம் விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு நடித்த ‘அனபெல் சேதுபதி’ படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

இந்த வரிசையில் தமிழ்நாடு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு படம் ஒடிடியில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரித்து வர்மா நடிப்பில் வெளியான படம் ‘பெல்லி சூப்புலு’.

இந்த படம் தமிழில் ஓமனப்பெண்ணே என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ள இப்படம் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.