வசூல் செய்தது 1000 கோடி... ஒரு பைசா லாபம் இல்லை விநியோகிஸ்தர்கள் புலம்பல்..!

 
’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இதுவரை 900 கோடி வசூல் செய்தது என்றும், ரூ.1000 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக இன்று ரூ.1000  கோடி வசூல் செய்த படம் என்ற போஸ்டர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இந்த படம் வசூலை வாரி குவித்திருந்தாலும் ,வெளிநாடுகளில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைத்திருந்தாலும், தமிழகத்தை பொருத்தவரை இந்த படத்தை வாங்கிய விநியோகத்திற்கு ஒரு பைசா கூட லாபம் இல்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இல்லை என்றும் பல தியேட்டர்களில் போட்ட முதலீட்டை எடுப்பதற்கு திணறிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து தமிழ் படங்கள் ரிலீசாகி கொண்டிருப்பதை அடுத்து தமிழ் ரசிகர்களும் ’கல்கி 2898 ஏடி’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்ததை அடுத்து இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரிய அளவில் வசூல் இல்லை.

ஆனாலும் இந்த படத்தின் வினியோகிஸ்தருக்கு நஷ்டமும் இல்லை லாபமும் இல்லை என்றும், போட்ட முதலீட்டை மட்டுமே எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூல் செய்திருந்தாலும் எங்களுக்கு ஒரு பைசா கூட லாபம் இல்லை என்று விநியோகிஸ்தர் தரப்பில் இருந்து கூறப்படுவதாகவும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெரிய அளவில் லாபம் இல்லை என்று கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.