கேரளாவில் டீக்கடை வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை - பிரபல நடிகை பேட்டி..! 

 

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை பார்வதி நடித்துள்ளார்.

இவர் மலையாள படங்களில் நடித்த நிலையில் சசி இயக்கிய ’பூ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ’சென்னையில் ஒரு நாள்’ ’மரியான்’ ’உத்தம வில்லன்’ ’பெங்களூர் நாட்கள்’ ’சிவரஞ்சனியும் சில பெண்களும்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.


 

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை பார்வதி, ‘ஒருவேளை சினிமாவில் நடிகை ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ’டீக்கடை வைத்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஒரு நல்ல டீக்கடை வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்றும் ஒருவேளை நடிகை ஆகவில்லை என்றால் நான் டீக்கடை வைத்திருப்பேன் என்றும் அதனை பல கிளைகளாக மாற்றி இருப்பேன் என்று கூறினார். இப்போது கூட எனக்கு டீக்கடை வைக்கும் ஆசை இருப்பதாகவும் விரைவில் அந்த ஆசை நிறைவேறும் என்றும் அவர் கூறியுள்ளார்.