அமரன் படத்தில் ஆசிப்வானி கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்தது இந்த நடிகர் தானாம்..!   

 

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்பல்லவி நடிப்பில் மறைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக்காக உருவாகிய அமரன் திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் அமரன் திரைப்படத்தில் தீவிரவாதிகளாக தோன்றிய ஆசிப் வானி, அல்தாஃப் பாபா கதாபாத்திரங்களுக்கு தமிழ் நடிகர்கள் வாய்ஸ் கொடுத்துள்ளனர். 

இவர்கள் யார் என்பதனை ராஜ்குமார் அவர்கள் டப்பிங் பேசும் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார். அந்த பதிவில் " எனது கோரிக்கையை ஏற்று ஆசிப் வானி கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்த கௌதம் கார்த்திக்க்கு நன்றி, மேலும் அல்தாஃப் பாபா கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்த என் அன்பு சகோதரன் ஹரிசுத்தமன் அவருக்கும் நன்றி என பதிவிட்டு வீடீயோவை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ.