போடுற வெடிய...! டிக்கெட் விலையை ரூ.100 ஆக குறைத்த பார்த்திபன்..!
இந்த நிலையில், இவர் இப்போது இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘டீன்ஸ்’. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் வருகிற 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது..அதே நாளில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படமும் வெளிவருகிறது.
இந்நிலையில் பார்த்திபன் தனது படத்தின் டிக்கெட் விலையை 100 ரூபாய் ஆக குறைத்துள்ளார். படம் வெளியாகி சில நாட்களுக்கு மட்டுமே இச்சலுகை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளீயிட்டுள்ள பதிவில் ” எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, பட் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு 100/- மட்டுமே, இதில் நட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே” என்று பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது அனைத்து தனியார் கார்பரேட் திரையரங்குகளிலும் ஒரு டிக்கெட்டின் விலை சராசரியாக 150 முதல் 200 ரூபாய் வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.