இன்றைக்கு செம ட்விஸ்ட் இருக்கும் போல...மனோஜுக்கு ஆப்பு வைத்த பாட்டி மற்றும் விஜயா!  

 

இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்டில் முத்து பாட்டியுடன் வீட்டுக்கு வர, நீ என்ன வேலை பண்ணியிருக்க என பேசி  அண்ணாமலையை கூப்பிட சொல்லுகின்றார். ஆனால் விஜயா முழித்துக் கொண்டிருக்க நானே போய் கூப்பிடுகிறேன் என்று அண்ணாமலையை கூப்பிட போகிறார்.

இதை அடுத்து அண்ணாமலையிடம் 25 வயசு பையனா நீ? பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு பேசாமல் இருக்க என்று கேட்க, அவர் விஜயா ரொம்ப மோசமாகிவிட்டா  என்று வருத்தப்படுகின்றார். அவ  புள்ள பாசத்துல தெரியாம இப்படி பண்ணிட்டா அவளை மன்னிச்சிடு. நீ இப்படி இருந்தா உன் பிள்ளைகளும் உன்கிட்ட இருந்து இத தான் கத்துப்பாங்க என்று சொல்லுகின்றார்.

ஆனாலும் அண்ணாமலை மீனா கிட்ட மன்னிப்பு கேட்டால் தான் நான் கதைப்பேன் என்று சொல்ல, அப்படி நடந்துச்சுன்னா விஜயா மீனாவை இன்னும் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சிடுவா என்று பாட்டி சொல்லுகிறார்.

இதனால் அண்ணாமலையை கீழே கூட்டி வந்து விஜயாவுக்கு  மன்னிப்பு கேட்க சொன்னதும் விஜயா அண்ணாமலையிடம் தெரியாமல் பண்ணிட்டேன் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.  

இதை அடுத்து பாட்டி மனோஜை கூப்பிட்டு எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்று கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுக்கின்றார். மேலும் ரோகிணியை பிடித்து நீ அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்த மாட்டியா இனிமேலாவது பொறுப்பா இரு என்று சொல்ல, அவன் பொறுப்பா இருக்க ஒரு வழி இருக்கு என்று முத்து சொல்கின்றார்.

அதன்படி அவன் மொத்தம் 29 லட்சம் தரணும். மாதம் மாதம் 50 ஆயிரம் தர சொல்லுங்க என்று ஐடியா கொடுக்க, ரோகினி, விஜயா, மனோஜ் ஆகிய மூவரும் அதிர்ச்சியாக நிற்க, ஏனையோர்  இது நல்ல ஐடியா என்று சொல்கிறார்கள்.

இறுதியாக பாட்டி மனோஜிடம் பணம் கொடுக்கச் சொல்ல, அவர் கடையில நிறைய செலவு இருக்கு மாச மாசம் கொடுக்க முடியாது என்று சொல்ல, விஜயாவை அதட்டி பாட்டி சொல்ல வைக்கிறார். விஜயாவும் அப்படியே பணம் கொடுக்குமாறு சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகின்றார். இதான் இன்றைய  எபிசோட்.