பரிட்சையில் தோற்றால் தப்பில்லை... வாழ்க்கையில் தோற்றால் தான் தப்பு : ஜெயம்ரவி..!

 

கோவை தனியார் கல்லூரியில் காதலர் தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயம்ரவி கலந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம்ரவி,” இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாணாக்கர்களுக்கு காதலர் தின வாழ்த்துகள்..

என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன். எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள்.. வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள், தற்போது உள்ளதைப்போல் மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களை தேடி வரும்.. . தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால் தான் தப்பு..

காதலர் தினம் இன்றைக்கு.. 18 வயது நினைவுகளை நினைவு படுத்தினால் 18 வயதில் ஒரு இன்னெசென்ஸ் இருக்கும்.. அது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று அனைவரையும் மதிக்க வைக்கிறது.. 18 வயதில்  ஒன் சைடு லவ் இருந்த போது நான் ரசித்த பாடல் "மஞ்சம் வந்த தென்றலுக்கு" . தான் என பாடிக் காட்டிய ஜெயம் ரவி,  ஏன் திருமணம் செய்கிறோம் என்றால் உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழந்த பெண் சொல்ல வேண்டும் அது தான் வாழ்க்கை,  அதற்கு தான் திருமணம்.. என்றார்.

மேலும் மாணவர்களை தம்பிகள் என்று அன்போடு அழைத்த ஜெயம்ரவி, தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி நான் கூறுகிறேன் "அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்" என கூறினார்.  சைரன் படம் அப்பா - மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம் எனவும், 15 ஆண்டுகளாக அப்பாக்களுக்கு நடக்க கூடிய கதை இது.. என பேச, மாணவிகள் சந்தோஷ் சந்தோஷ் என ஆர்ப்பரித்தனர்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, சைரன் படம் மிக முக்கியமான படம், குடும்பத்திற்காக இந்த படம் செய்துள்ளதாக கூறினார். மேலும் சைரன் திரைப்படம் தனக்கு  சவாலாக இருந்ததாக குறிப்பிட்ட ஜெயம்ரவி, 15 ஆண்டுகால வித்தியாசங்களை படத்தில் அனைவரும் காண்பித்துள்ளதால் இந்த படம் ஒரு ஆர்கானிக் ஆக வந்துள்ளது என தெரிவித்தார்.