பெரும் சோகம்..! கங்குவா பட எடிட்டர் திடீர் உயிரிழப்பு..!

 
கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கங்குவா படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, நட்டி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து பல தடைகளைத் தாண்டி நேற்றைய தினம் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது சூர்யாவும் விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்து வந்தார். அதன் பின்பு படத்தின் ரிலீஸ் தேதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

கங்குவா படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதன் பின்பு போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்தது.

இந்த நிலையில், கங்குவா படத்தில் பணியாற்றிய மற்றும் ஒரு படத்தொகுப்பாளர் மரணமடைந்துள்ளார். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலம் ஆனார்.

இது தவிர குற்ற பத்திரிக்கை, அரசியல் பொண்டாட்டி ராஜ்ஜியம், மக்கள் ஆட்சி என 46 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளாராம். இவ்வாறு பணியாற்றிய உதயசங்கர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்திருப்பது திரையுலகினருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு அவருடைய சொந்த ஊரான சேலம் அருகே இறுதிக் கிரிகைகள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.