இரண்டு கதாநாயகிகளுடன் கைக்கோர்க்கும் ஜெய்..!!
அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்து தமிழ் சினிமாவில் பெரியளவில் ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் ஜெய். இவருடைய நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘காபி வித் காதல்’ பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் அது தோல்வி படமாக அமைந்தது.
இந்நிலையில் ஜெய் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ’தீராக் காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்குகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அதே கண்கள் படத்தை இயக்கி இருந்தார்.
முற்றிலும் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தற்போது படத்திற்கான ஷூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும், விரைவில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்படும் என தகவல்கள் கூறுகின்றன.