ஜெயிலர் செகண்டு சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களை பார்க்கலாம்.
 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், தமன்னா, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வரும் ஆகஸ்டு 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘காவாலா’ பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. தமன்னாவுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல்  பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. 

தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்காக வெளியாகியுள்ள ப்ரோமோவில் படத்தின் பாடலுக்கு ‘ஹ்குஹும், இது டைகரின் கட்டளை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.