’ஜெயிலர்’ சிங்கிள்- சன் பிக்சர்ஸ் கொடுத்த தரமான அப்டேட்..!!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் சிங்கிள் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Jul 2, 2023, 12:05 IST
தொடர் தோல்விகளுக்கு பிறகு ரஜினிகாந்த் பெரும் முனைப்புக் காட்டி நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’. கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இயக்கும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, வசந்த்ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்து முடிந்துவிட்ட நிலையில், படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அறிவிக்கப்பட்டபடி ஆகஸ்டு 10-ம் தேதி ஜெயிலர் படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் தமிழக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.