சர்ச்சையில் சிக்கிய "ஜாலியோ ஜிம்கானா" பாடல்!
`ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தின் முதல் பாடலான `போலீஸ்காரனை கட்டிகிட்டா' பாடல் (அக்டோபர் 25) வெளியாகியிருந்தது. இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியிருக்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரமே இந்த பாடலை எழுதியிருக்கிறார்.
இந்த பாடல் முழுவதும் இரட்டை அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கிறதென இப்பாடலைச் சமூக வலைத்தளமெங்கும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த பாடல் குறித்து சக்தி சிதம்பரம் "பாடல் செம ஹிட் இன்னைக்குள்ள 1 மில்லியன் டச் பண்ணிடும். சமூக வலைத்தளங்கள்ல வர்ற விமர்சனங்களைப் பற்றி நான் கவலையேபடல.
மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்கிறாங்க. ஒரு பெண் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை இப்படியெல்லாம் இருக்கணும்னு சொல்றதுதான் இந்த பாடல். இது டபுள் மீனிங், டிரிப்ள் மீனிங்காக இருக்குனு சொல்ற விஷயங்களுக்குள்ள நான் போகல. அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுனு என்று கூறியுள்ளார்.