பாவாடை தாவணியில் காதலனுடன் ஏழுமலையானை தரிசித்த ஜான்வி கபூர்..!!

தெலுங்கு சினிமாவில் கால்பதிப்பதை அடுத்து தனது காதலனுடன் நடிகை ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார்.
 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரி, இந்தியில் தயாரான ‘தடக்’ மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ‘குன்ஜன் சக்ஸேனா’ , ’மில்லி’ , ‘ரூஹி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிரபலமான திரைக்குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், இவரால் இன்னும் இந்தியில் முன்னணி நடிகையாக காலூன்ற முடியவில்லை.

தற்போதைக்கு அவர் மிஸ்டர் & மிஸஸ் மாஹி என்கிற இந்திப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் ஜான்வி கபூருக்கு இந்தியைக் காட்டிலும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அதுவும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவருடைய அறிமுகத்தை பலரும் எதிர்நோக்கியுள்ளனர்.

அதை பூர்த்தி செய்யும் விதமாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் அவருடைய அடுத்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படம் ரூ. 200 கோடி முதல் ரூ. 300 கோடி மதிப்பில், ஹாலிவுட் தரத்தில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு ரூ. 4 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மட்டுமே ரூ. 2 கோடி கடந்து சம்பளம் பெறுகின்றனர். கீர்த்தி சுரேஷ், ஸ்ருதி ஹாசன், தமன்னா, பூஜா ஹெக்டே போன்றோர் ரூ. 2 கோடிக்குள் தான் சம்பளம் பெறுகின்றனர். இந்த வரிசையில் சாய் பல்லவியின் சம்பள விபரங்கள் தெரியவில்லை.

ஆனால் எடுத்த எடுப்பிலே ரூ. 4 கோடி சம்பளம் வாங்கும் நடிகை என்கிற நிலையை அடைந்துள்ளார் ஜான்வி. தனது தெலுங்குப் படத்துக்கான படப்பிடிப்பு நன்றாக வரவேண்டும் என்பதற்காக, சகோதிரி குஷி கபூர் மற்றும் தனது காதலன் ஷிகார் பஹாரியா உடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். 

அப்போது ஜான்வி மற்றூம் குஷி இருவரும் பாவாடை தாவணியில் கோயிலுக்கு வந்திருந்தனர். உடன் வந்த ஷிகார் பஹாரியா மேல் சட்டை அணியாமல், வெறும் துண்டு போர்த்திக் கொண்டு வந்தார். இவர்கள் மூவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த வீடியோவை தேவஸ்தானம் அமைப்பு வெளியிட்டுள்ளது.