இந்தி திரையுலகில் ராசியில்லாமல் போன அட்லீ- பின்வாங்கும் ஜவான்..!!

ஷாரூக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’ஜவான்’ திரைப்படம் வரும் ஜூன் மாதன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த படத்தின் வெளியீடு பல மாதங்களுக்கு பிறகு தள்ளிபோயுள்ளது.
 

அட்லீ இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான படம் பிகில். விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் படம் இயக்க தயாரானார் அட்லி. அதற்காக ஷாரூக்கானை அணுகிய அவர், இரண்டு கதைகளை அவரிடம் கூறினார்.

அதில் ஒரு கதையை ஓகே செய்தி ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் யோகி பாபு, ப்ரியாமணி, சானியா மல்ஹோத்ரா, சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோன் உள்ளிட்டோர் ஜவான் படத்தில் இணைந்தனர்.

இந்த படத்துக்கான ஷூட்டிங் ஓராண்டுக்கு மேல் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஜவான் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.