18 மொழிகளில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ’ஜெயம் ரவி 32’..!!

நடிகர் ஜெயம் ரவியின் 32-வது படத்தை வேல்ஸ் இண்டர்நேஷ்னஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் ஒட்டுமொத்தமாக ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

கடந்த மார்ச் 10-ம் தேதி எம். கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘அகிலன்’. இது பாக்ஸ் ஆஃப்ஸில் படு தோல்வி அடைந்தது. இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் - 2’ வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

மேலும் அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ மற்றும் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இதையடுத்து உருவாகும் ஜெயம் ரவியின் 32-வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் தனது வேல்ஸ் ஃப்லிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதனுடைய பட்ஜெட் ரூ. 100 கோடி என்று தெரியவந்துள்ளது. படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உட்பட 18 மொழிகளில் ஜெயம் ரவின் 32-வது படம் தயாராகவுள்ளது. விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகையர் தேர்வு குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.