விவகாரத்து பிறகு வெப் சிரீஸ் நடிகையுடன் காதல்- வில்லன் நடிகர் விளக்கம்..!!

தென்னிந்திய சினிமாவின் வில்லன் நடிகர்களில் பிரபலமான ஜே.டி. சக்கரவர்த்தி பிரபல நடிகையை காதலித்து வருவதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

 

ஆந்திராவைச் சேர்ந்த ஜே.டி. சக்கரவர்த்தி 1985 முதல் 90-களின் காலக்கட்டம் வரை சினிமாவில் கொடிக்கட்டி பறந்தார். அவருக்கு இருந்த புகழை பார்த்து, நடிகை ஸ்ரீதேவியின் தாயார் தனது மகளுக்காக ஜே.டி. ஜெர்ரியை மாப்பிளை பார்த்தார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

இவர் தமிழில் சர்வம், கன்னத்தில் முத்தமிட்டால், அரிமாநம்பி, கச்சேரி ஆரம்பரம், சமர் போன்ற படங்களில் நடித்துள்ளார். பெருமாலும் இவர் வில்லன் வேடங்களில் அதிகளவில் நடித்துள்ளார். அதனால் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற வில்லன் நடிகர் என்ற பெயரை எடுத்தார்.

அண்மையில் இவர் தனது மனைவி அனுகீர்த்தியிட இருந்து விவாகரத்து பெற்றார். இது தெலுங்குப் பட உலகில் பெரியளவில் பேசப்பட்டது. தற்போது ஜே.டி. சக்கரவர்த்தி தயா என்கிற வெப் சிரீஸில் நடித்து வருகிறார். அவருடன் நடிக்கும் விஷ்ணுப்ரியா என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுத்த விஷ்ணுப்ரியா , தான் ஜே.டி. ஜெர்ரியை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறிவிட்டார். இது குறித்து ஜே.டி. சக்கர்வர்த்தி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதில் தனக்கும் விஷ்ணுப்ரியாவுக்கும் இடையில் எந்தவிதமான காதலும் கிடையாது. நாங்கள் வெறும் உடன் பணிபுரிவர்கள் மட்டுமே. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.