பொறாமை ஒரு கேன்சர் மாதிரி...  பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் செல்வராகவன் வீடியோ..!

 
இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர் கூறுகையில், நாம் பிறக்கும் போது நம்முடைய கை, கால், தலை போலவே நம்முடன் பொறாமையும் சேர்ந்தே பிறந்து விடுகின்றது.

தெருவில் நடந்து போகின்றவரின் பொண்டாட்டி அழகாக இருந்தால் அதை பார்த்து பொறாமை, பக்கத்துக்கு வீட்டுக்காரர் கார் வாங்கினால் அதை பார்த்து பொறாமை, ஆபீஸில் இன்னொருவருக்கு பிரமோஷன் கிடைத்தால் அதை பார்த்து பொறாமை இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.பொறாமை ஒரு கேன்சர் மாதிரி உடம்புல பரவி அந்த பீலிங்கிலேயே நம்ம நச்சரித்து கடைசி சமாதி வரைக்கும் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் மேலும் பல விஷயங்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ,